Monday, January 23, 2012

எந்தன் கண் முன்னே - நண்பன் பாடல் வரிகள் (Enthan Kan Munney - Nanban Lyrics)

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடகர்கள்: ஆலாப் ராஜு
வரிகள்: மதன் கார்க்கி

எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?

நண்பன் - என் ஃப்ரண்ட போல யாரு மச்சான் பாடல் வரிகள் (Nanban - En frienda pola yaru machan lyrics)

படம் - நண்பன்
பாடியவர்கள் - க்ரிஷ், சுசித் சுரேசன்
பாடல் - விவேகா

என் ஃப்ரண்ட போல
யாரு மச்சான் - அவன்
டிரெண்ட எல்லாம்..
மாத்தி வச்சான்
நீ எங்க போன
எங்க மச்சான் - என
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்

நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்

என் ஃப்ரண்ட போல
யாரு மச்சான் - அவன்
டிரெண்ட எல்லாம்..
மாத்தி வச்சான்
நீ எங்க போன
எங்க மச்சான் - என
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்

நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்

தோழனின் தோள்களும்
அன்னை மடி - அவன்
தூரத்தில் பூத்திட்ட
தொப்புள் கொடி

காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்துப்படி

உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான்மேகம் போல நின்றோம்

புது பாதை நீயே போட்டுத்தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயைத்தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்
  
என் ஃப்ரண்ட போல
யாரு மச்சான் - அவன்
டிரெண்ட எல்லாம்..
மாத்தி வச்சான்
நீ எங்க போன
எங்க மச்சான் - என
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்

நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்