Thursday, June 5, 2014

ஆஹா கல்யாணம் | மழையின் சாரலில் மழையின் சாரலில் (Aha Kalyanam - Mazhayin Saralil)

படம் - ஆஹா கல்யாணம்

வரிகள் - தாமரை

இசை - தரன் குமார்

குரல் - நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன்


மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது...
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடித்தே கரையில் எழவா...

இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை

மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது...

Sometimes I Need Your Love
Sometimes I Need Your Hug
What Would I do Now
What Would I do Now
Sometimes I Need You
Sometimes I Feel You
What Would I do Now
What Would I do Now

மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது....

யார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க
நான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க

கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க
மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண்க

வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
நடந்து பழகும் விழுந்து அழுகும்
குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா....

இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா…

விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடித்தே கரையில் எழவா...

இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை

மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது




Saturday, April 26, 2014

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் தமிழ் பாடல் வரிகள் - தெகிடி (Vinmeen Vithayil Tamil Lyrics - Thegidi)

----------------------------------------------------------------------

படம் : தெகிடி
பாடல் : விண்மீன் விதையில்
பாடியவர்கள் : அப்ஹே ஜோத்புர்கர் , சைந்தவி
இசை : நிவாஸ்  K பிரசன்னா
பாடலாசிரியர் : கபிலன்
நடிகர் : அசோக் செல்வன், ஜனனி ஐயர்

----------------------------------------------------------------------

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உன்னை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடீ
முதன் பெண் தானே நீ தானே
எனக்குள் நானே ஈர்ப்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

ஒரு பெண்ணாக உன் மேல் நானே
பேராசை கொண்டேன்
உன்னை முன்னாலே பார்க்கும்போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்பார்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போவேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு

மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

Wednesday, August 21, 2013

காதல் என்னுளே வந்த நேரம் தமிழ் பாடல் வரிகள் - நேரம் (Kadhal Ennulle Vandha Neram Tamil Lyrics - Neram)

காதல் என்னுளே வந்த நேரம்

படம்: நேரம்
பாடல்: காதல் என்னுளே வந்த நேரம்
பாடியவர்: இரஞ்சித் கோவிந்த்
இசையமைப்பாளர்: இராஜேஷ் முருகேசன்


காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல்
மனதின் உள்ளே வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டி செல்வது யாரோ

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை
நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும் முன்னே தருவாய்
உன் முகதசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடி பார்ப்பேன்
குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால் உன்னுள்ளே
நானும் வந்தால் மெதுவாய் சரியாய் அது போகாதா

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லையென்றால் தவிப்பேன்
வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும்
உன் வாசத்திலே பிழைப்பேன்
என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிஞ்சாலும்
உன் அன்பு வந்த பின்னே நாலும் மாறி போகும்
என் குணம் குணவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல்
மனதின் உள்ளே வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டி செல்வது யாரோ

நேற்று அவள் இருந்தாள் - மரியான் (Netru Aval Irundhal - Mariyan)

நேற்று அவள் இருந்தாள் - மரியான்

படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வாலி
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், சின்மயி


நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
காற்றெல்லாம் அவள் தேன்குரலாய் இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது

நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல்லும் இல்லையே இல்லையே
நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததெல்லாம் உன் இசையே
வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா

நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்
இருந்தாய்! இருந்தோம்!

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது
கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது

இன்னும் கொஞ்ச நேரம் - மரியான்(Innum Konja Neram - Mariyan)

இன்னும் கொஞ்ச நேரம்

படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: கபிலன்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் 


இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே

இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலயே
இப்போ என்ன விட்டுப் போகாதே என்ன விட்டுப் போகாதே
இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ மழை போல நீ வந்தா கடல் போல நான் இருப்பேன்

இதுவரைக்கும் தனியாக என் மனசை
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையைவிட்டு வலையைவிட்டு வளையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளைப் போல
வந்தா உன் கையில மாட்டிக்குவேன் வளையலைப் போல
உன் கண்ணுக்கேத்த அழகா வரேன் காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்புக்காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்னை இழுக்க என்னை இழுக்க
என் மனசு நிறையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்னை நீ தொட்டாதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு
தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே

நீ என் கண்ணு போல இருக்கணும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்
 

Thursday, May 24, 2012

பிறை தேடும் இரவிலே உயிரே பாடல் வரிகள் - மயக்கம் என்ன‌ (Pirai Thedum Iravile Uyire Lyrics - Mayakkam Enna)


பாடல் : பிறை தேடும் இரவிலே உயிரே
படம்: மயக்கம் என்ன‌
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
"என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி"

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..


விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே
"இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்...

ஆத்தாடி மனசு தான் பாடல் வரிகள் - கழுகு (Aathadi Manasuthan Lyrics - Kazhugu


படம் : கழுகு
இசை: யுவன் ஷங்கர் ராஜா
குரல்:: கார்த்திக்ராஜா
வரிகள் : நா. முத்துக்குமார்

ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே
அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே
அடடா இந்த மனசு தான்
சுத்திச் சுத்தி உன்னத் தேடுதே
அழகா இந்தக் கொலுசு தான்
தத்தித் தத்தி உன் பேர் சொல்லுதே

ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே

கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்டத்தட்ட கண்ணு வேர்த்துப் போகும்
மூச்சே காச்சலா மாறும்...ஓஹோ
விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒண்ணு மோதும்
மனசே மார்கழி மாசம்
அருகில் உந்தன் வாசம்
இந்தக் காத்தில் வீசுது- விழி
தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுது
பாவி நெஞ்ச என்ன செஞ்சே
உந்தன் பேர சொல்லிக் கொஞ்ச
அவளக் கொன்னாலும் அப்போதும்
உன் பேர சொல்வாளடா...

ஒண்ணா ரெண்டா என்ன நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச தைரியம் இல்ல  ஒஹோ
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் அவள முட்டி முட்டித் தள்ள
இருந்தும் வெட்கத்தில் செல்ல
காலம் எல்லாம் அவள
பாத்தே வாழணும்
உயிர் போகும் நேரம் அவளின்
மடியில் சாய்ந்தே சாகணும்
ஒன்னத் தவிர என்ன வேணும்
வேற என்ன கேட்கத் தோணும்
நெஞ்சம் அவளோட வாழாம
மண்ணோடு சாயாதடா

Tuesday, May 15, 2012

அழகே அழகே - ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள் - (Azhage Azhage - Oru kal Oru kannadi Lyrics)


அழகே அழகே - ஒரு கல் ஒரு கண்ணாடி

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் : நா.முத்துகுமார்
குரல்கள் : முகேஷ் - ஸ்ரீ மதுமிதா

அழகே அழகே அழகின் அழகே நீயடி - உன்
அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி – என்
ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்
நீ தூண்டில்காரனைத் தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
பாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

அழகே அழகே ....

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்
கண்கள் இரண்டும் காதல் சொல்லும் இருந்தும் நடித்தாய்
அடிக்கடி முள்ளென தைத்தாய்
ஆயினும் பூவென பூப்பாய்
இதயக் கதவை இறக்கம் கொண்டு எனக்காய் திறப்பாய்
இந்தக் காதல் என்பது ஒரு மழலைப் போன்றது
அது சிணுங்க சிணுங்கதான் கவனம் பிறக்கும்
உனைக் கெஞ்சிக் கேட்கிறேன்
எனைக் கொஞ்சக் கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய் தொடர்ந்து நடிக்கிறாய்
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம்வர
கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
பாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

பலப்பல கனவுகள் இருக்கு
அதை ஏன் சொல்லணும் உனக்கு
மனசுவிட்டு பேச நீயும் நண்பனா எனக்கு
பார்த்ததும் பிடித்தது உனக்கு
பழகிட தோணனும் எனக்கு
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு
நீ கோயில் தேரடி மரக்கிளையும் நானடி
என்னைக் கடந்துபோகையில் நொறுங்குது நெஞ்சம்
நீ காதல் கஜினியா பகல் கனவில் பவனியா
ஏன் துரத்தி வருகிறாய் நெருங்க நினைக்கிறாய்
உனக்கும் எனக்கும் எதுக்கு காதல் வலம்வர
கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

அழகே அழகே ....

போ நீ போ பாடல் வரிகள் - 3 (Po Nee Po Lyrics - 3)


படம்: 3
இசை: அருனித்
பாடியவர்கள்: அருனித், மோஹித்
பாடல் வரி: தனுஷ்

போ நீ போ... போ நீ போ...

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ….
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ…
நான் போக்கும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ…
நிஜம் தேடும் பெண்ணே போ….
உயிரோட விளையாட விதி செய்தாய்  அன்பே போ...

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ….

ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ ஒ... ஒ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

ஒ... உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே…
உயிர் காதல் நீ காட்டினாய் மறவேனே பெண்ணே….
இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா…
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா…

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

போடி போ..... போடி போ
என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ…
என் கனவு களைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ…
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ…
நான் போக்கும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ...
நிஜம் தேடும் பெண்ணே போ…
உயிரோட விளையாட விதி செய்தாய் அன்பே போ…

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ…

நீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - (Nee partha vizhigal lyrics)


படம்: 3
இசை: அருனித்
பாடியவர்கள்: சுவேதா மோகன், விஜய் யேசுதாஸ்
பாடல் வரி: தனுஷ்

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம் கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம் கேட்டாலும் வருமா
கேக்காத வரமா

நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால்
உடனே வருவாய் உடல் சாகும் முன்னால்
அனலின்றி குளிர் வீசும் இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம் கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா

கண்ணழகா… காலழகா பாடல் வரிகள் - (Kannazhaga Kalazhaga lyrics)


படம்: 3
இசை: அருனித்
பாடலாசிரியர்: தனுஷ்
பாடியவர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன்
-----------------------------------------------------------------
கண்ணழகா… காலழகா
பொன் அழகா.. பெண் அழகா

எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
—-
எங்கேயோ பார்க்கிறாய் என்னெனென்ன சொல்கிறாய் எல்லைகள் தாண்டிட மாயம்கள் செய்கிறாய்

உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேர்ந்திட நான் வரை பார்க்கிறேன்

இதழும் இதழும் இணையட்டுமே புதிதாய் படிகள் இல்லை

இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என் உயிர் சேர்ந்திட
ஓர் வழி சொல்லவா
கண்ணழகே.. பேரழகே
பெண்ணழகே.. என் அழகி

உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி