Friday, December 23, 2011

7 ஆம் அறிவு – முன் அந்தி சாரல் நீ (7m arivu mun andhi saalai nee - lyrics)

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: கார்த்திக், மேஹா

====
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலை தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில் வரும் கனவு நீ..
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலை தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில் வரும் கனவு நீ..
====
ஒ அழகே ஒ இமை அழகே
ஹே கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஒரழகே
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னை தீண்டதானே
மேகம் தாகம் கொண்டு மழையை தூவுதோ
வந்து உன்னை தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ ஒ ஒ
====
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
====
அதிகாலை ஒ.. அந்தி மாலை..
உன்னை தேடி பார்க்க சொல்லி போராடும்
உன்னை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தை போலே
என்னை சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே
என்னை தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்
====
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலை தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில் வரும் கனவு நீ..

Wednesday, November 23, 2011

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ – வெப்பம் பாடல் வரிகள் ( Katril Earam - Veppam Lyrics)

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை
வரைப் போவோமா ?
நேற்று நாளை அது பொய்யானதோ ?
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ?
மேகம் அலையும் அந்த வானம்
வரைப் போவோமா ?
இன்றென்ன இத்தனை இன்பம் ?
இதயக் கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம்
கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று
உதட்டின் மீது பூத்திடுதே
வாழ்க்கையை பிடிக்கிறதே
காற்றில் ஈரம் ….
ஓ ஒரு நாள் இந்த ஒரு நாள்
உயிரோடு வாழும்
பயணம் இந்த பயணம்
இது தொடர்ந்திட வேண்டும்
அருகில் உனதருகில் நான் வாழும்
நிகழ் காலம் போதும்
நிமிடம் இந்த நிமிடம்
இது உறைந்திட வேண்டும்
மௌனத்தில் சில நேரம்
மயக்கத்தில் சில நேரம்
தயக்கத்தில் சில நேரம்
இது என்னவோ புது உலகின்கே
கண்ணருகில் சில தூரம்
கை அருகில் சில தூரம்
வழித் த்னையைக் கேட்கிறதே
வா வா ….
ஓ நம் நெஞ்சில் ஓரம் ஏன்
இங்கு இதனை ஈரமோ ?
நம் கண்களில் ஓரமா
புதுக் கனவுகள் நூறும்
இது என்ன இது என்ன
இந்த நாள் தான் திருநாளா?
இதற்காக இதற்காக
காத்திருந்தோம் வெகு நாளா ?
இன்றென்ன இத்தனை ….
காற்றில் ஈரம் …..

ஒரு தேவதை - வெப்பம் பாடல் வரிகள் (Oru Devadai - Veppam Lyrics)

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்
என்னோடு புது மாற்றம் தந்தாள்
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ
கண் தூங்கும் போதும் காவல் தந்தாள்
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்

ஓ ஹோ ஓ ....

ஒரு தேவதை வீசிடும்.......

என் வானில் மேகங்கள் சொல்லாமல் தூறுதே
என் காதல் வானிலை சந்தோஷம் தூவுதே
நீ தந்தான் பார்வை நனைந்தாளே பாவை
அன்பே அன்பே எந்தன் நெஞ்சில்
ஒளி வீசும் காலை
இருள் பூசும் மாலை
உந்தன் முகம் எந்தன் கண்ணில்
மின்சாரம் இல்லா நேரத்தில்
மின்னலாய் வந்து ஒளி தருவாள்
அந்த வெளிச்ச மழையில்
நான் நனைந்திடுவேன்
விரல் தொட்டு விடும் தூரத்தில்
மனம் சுட்டெரிக்கும் பாரத்தில்
புரியாத போதை
இது புரிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

ஓ ஹோ ஓ ஹோ ....

அவள் மாலையில் மலர்ந்திடும் மலர் அல்லவா
வாசனை என் சொந்தம்
அவள் அனைவரும் ரசித்திடும் நதி அல்லவா
அலை மட்டும் என் சொந்தம்

ஓ ஹோ ஓ ......

கண்ணாடி அவள் பார்த்ததில்லை
ஏன் என்று நான் கேட்டதில்லை
அவள் அழகை அளக்கும் ஒரு கருவி அல்ல
அவள் கட்டளையை கேட்டு தான்
நான் கட்டுப்பட்டு வாழுவேன்
அறியாத பாதை இது அறிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

ஓ ஹோ ஓ.....

ஒரு தேவதை.......

மழை வரும் அறிகுறி - வெப்பம் பாடல் வரிகள் (Mazhai varul arikuri - Veppam Lyrics)

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே இன்று உனை தேடி தேடி பார்க்கிறது
உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே

அறியாத வயதில் விதைத்தது ஓ ஓ ஓ ....
அதுவாகவே தானே வளர்ந்தது
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஓ ஓ ஓ ....
அட யாரது யாரது பறித்தது?
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்தடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஓ ஓ ஓ..
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்?
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஓ ஓ ஓ...
யார் தந்தது வழிகளில் காயங்கள்?
இந்தக் காதலும் ஒரு வகை சித்ரவதைதானே
அது உயிருடன் எரிக்குதடா

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே இன்று உனை தேடி தேடி பார்க்கிறது
உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?

காதல் என் காதல் பாடல் வரிகள் - மயக்கம் என்ன (Kadhal en Kadhal Lyrics - Mayakkam Enna)


காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
ஏ மச்சி.. உட்ரா… ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
சேரி பாடி தொல..

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேநீருல..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி எனகிதுவே போதும்..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..

மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி..
பிரிரென்ஸ்'சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்'று வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,
படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி போதும் மச்சான்..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..

Wednesday, October 26, 2011

எம்மா எம்மா காதல் பொன்னம்மா - 7ம் அறிவு ( Yamma Yamma kathal ponnamma - 7am arivu


எம்மா எம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
எம் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கணவுக்குள்ளே அவள வச்செனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சுகாத்த வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி கெட்டுப்போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னால்
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கையவிட்டு தான் போயாச்சு
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண்பேச்சு
மனம் ஒன்னாலே புண்ணாபோச்சு
காதல் பாத கல்லு முள்ளுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திர
அத போட்டுகிட்டா மூங்கில் யாத்திர

எம்மா எம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
எம் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா

ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாடக்கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் மனம் உன்ன பத்தி பாடும்
வந்து போனதாரு அது நந்தவனத்தேரு
நம்பி நொந்து போனேம்பாரு அவ பூவு இல்ல நாறு
என்ன திட்டம்போட்டு நீ திருடாதே
எட்டி நின்னு நீ வருடாதே
கட்டெரும்பபோல் எருடாதே
மனம் தாங்காதே
தாங்காதே
வானவில்லின் கோலம் நீயம்மா
என் வனம் தாண்டி போனதேன்னம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
எந்தன் கண்ண கட்டி கூட்டிபோங்கடா

எம்மா எம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
எம் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கணவுக்குள்ளே அவள வச்செனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சுகாத்த வாங்கி போனாளே




Thursday, October 6, 2011

மாசமா ஆறு மாசமா - engeyum eppothum song lyrics

பாடல்: மாசமா ஆறு மாசமா
படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்: சத்யா
வரிகள்: நா. முத்துக்குமார்

மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
வாரமா சில பல வாரமா
காத்துக்கிடந்தேனே பூவிழிக்கு
கண்ணுறங்கல செவி மடுக்கல
பசி எடுக்கல வாய் சிரிக்கல
கை கொடுக்கல கால் நடக்கல
அந்து வெறுப்புல ஒன்னும் புரியல
ஏ மாசமா மாசமா ஏங்கித் தவிச்சேன்

மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு

ரோட்டுல பாக்கல பார்க்குல பாக்கல
பஸ்ஸுல பாக்கல ஆட்டோல பாக்கல
தியேட்டர்ல பாக்கல ஸ்ட்ரீட்டுல பாக்கல
பாத்து எல்லாம் தொலவுல
காட்டுல நிக்கல மேட்டுல நிக்கல
அங்கேயும் நிக்கல இங்கேயும் நிக்கல
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல
நின்னது அவளோட மனசுல
நின்னாளோ பார்த்தாளோ தெருவுல
நான் பாக்காம போனேனே முதலுல
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு

மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு

நம்பரும் வாங்கல போனும் பண்ணல
அட்ரஸ் வாங்கல லெட்டரும் கொடுக்கல
ஃபாலோ பண்ணல தூது அனுப்பல
எப்படி வந்தா ரில
கிண்டலும் பண்ணல சண்டையும் போடல
மொறச்சு பாக்கல சிரிச்சு பேசல
வழி மறிக்கல கையப்பிடிக்கல
எப்படி விழுந்தா காதல்ல
அவ மூர்ச்சாகி போனாளே உயிரிலே
எனக்கு மேட்ச்ஜ் ஆகி விட்டாளே லைஃப்புல
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு

மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
கண்ணுறங்கல செவி மடுக்கல
பசி எடுக்கல வாய் சிரிக்கல
மோசமா மோசமா காதலிச்சேன்